Ontario மாகாணம் முழுவதும் ஆயிரக் கணக்கணக்காவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை திங்கட்கிழமையும் (31) தொடர்ந்தது.
வார விடுமுறையில் எதிர்கொள்ளப்பட்ட உறைபனி மழை காரணமாக இந்த மின்சார இழப்பை வாடிக்கையாளர்கள் தொடர்ந்தது எதிர்கொள்கின்றனர்.
Ontario-வில் 396,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என Hydro One அதிகாரிகள் திங்கள் மாலை தெரிவித்தனர்.
வார இறுதியில் புயல் ஆரம்பித்ததிலிருந்து 532,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க முடிந்தது என Hydro One தெரிவித்தது.
ஆனாலும் மாகாணத்தின் சில பகுதிகளில் மின் தடைகள் வெள்ளிக்கிழமை (04) வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Orillia ,Peterborough ஆகிய நகரங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் முழுமையாக பணியாற்றி ஈடுபட்டுள்ளதாக Hydro One அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பை வலியுறுத்திய அதிகாரிகள், அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், மரங்கள், சேதமடைந்த மின் சாதனங்களில் இருந்து தூர விலகி இருக்குமாறு வாடிக்கையாளர்களை கோரினர்.
இந்த நிலையில் Ontario-வை வார இறுதியில் தக்கிய புயல், கிழக்கு நோக்கி நகர்வதாக சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.
Quebec, New Brunswick ,Nova Scotia மாகாணங்களின் சில பகுதிகளில் திங்களன்று உறைபனி, புயல் எச்சரிக்கை நடைமுறையில் இருந்தது.
Quebecகில், 13,000 க்கும் மேற்பட்ட Hydro-Québec வாடிக்கையாளர்கள் திங்கள் மாலை வரை மின்சாரம் இல்லாத நிலை தொடர்ந்தது.