கனடிய பிரதமர் Mark Carney-யுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (28) இரு நாட்டின் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர்.
Mark Carney கனடிய பிரதமராக பதவியேற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் மேற்கொள்ளும் முதலாவது தொலைபேசி உரையாடலை இதுவாகும்.
April 2 முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்படாத வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்க நடவடிக்கை எடுத்த முடிவை அமெரிக்க அதிபர் அறிவித்த சில தினங்களின் பின்னர் இந்த உரையாடல் நிகழ்ந்தது.
இந்த உரையாடலின் போது இருவரும் பல விடயங்களில் உடன்பட்டதாக தெரிவித்த Donald Trump, கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக சந்திக்க இணக்கி உள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சிறந்ததாக அமையும் அரசியல், வணிகம் உட்பட்ட விடயங்களில் செயல்படுவதற்கு இந்த சந்திப்பு உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.