தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாட எதிர்பார்த்திருக்கும் கனடிய பிரதமர்?

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-புடன் விரைவில் ஒரு உரையாடலை ஏற்பாடு செய்ய பிரதமர் Mark Carney எதிர்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான கனடியத் தூதர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (14) கனடாவின் பிரதமராக Mark Carney பதவியேற்ற நிலையில் கனடிய தரப்பு இந்த சந்திப்புக்காக அமெரிக்காவை அணுகியுள்ளதாக தூதர் Kirsten Hillman கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் Mark Carney “ஒரு திடமான உறவை” உருவாக்க முயன்று வருவதாக அவர் கூறுகிறார்.

அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் Donald Trump எடுக்கும் முயற்சிகளை Mark Carney மதிப்பதாகவும் Kirsten Hillman கூறினார்.

கனடாவுக்கும் அதே பொருளாதார மேம்பாட்டை Mark Carney எதிர்பார்ப்பதாகவும் Kirsten Hillman கூறினார்.

Mark Carney, தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்தார்.

புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-ம்பை சந்திக்கும் திட்டங்கள் எதுவும் உடனடியாக இல்லை என தெரிவித்திருந்தார்.

பதவியேற்றவுடன் கனடாவின் புதிய தலைவர் அமெரிக்க தலைவரையும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி கனடிய தலைவரையும் சந்திப்பது வழமையாகும்.

மாறாக “கனடிய இறையாண்மைக்கு தகுந்த மரியாதை” செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு Mark Carney பதவியேற்ற பின்னர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை Mark Carney தனது முதலாவது பயணமாக ஐரோப்பா செல்ல முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேற்கு கனடாவில் Delta மாறுபாட்டின் வழித்தோன்றல்களை கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள்!

Gaya Raja

கனடிய Olympic வீரரின் பயிற்சியாளரின் அங்கீகாரம் இரத்து!

Lankathas Pathmanathan

COVID தொற்று: மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ள கனடா!

Gaya Raja

Leave a Comment