அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என சுகாதார அமைச்சர் Mark Holland அறிவித்தார்.
விரைவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படும் நிலையில் இந்த அறிவித்தல் வியாழக்கிழமை (13) வெளியானது.
Ajax தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான Mark Holland, முதல் தடவையாக 2004 ஆம் ஆண்டு தெரிவானார்.
2011 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், மீண்டும் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
பிரதமராக Mark Carney யும் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (14) பதவியேற்க உள்ளது.
இந்த அமைச்சரவையில் Justin Trudeau-வின் அமைச்சரவையில் உள்ள 37 உறுப்பினர்களை போல் அல்லாமல் குறைவான அமைச்சர்களை கொண்டிருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.