February 24, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைன் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் கனடிய பிரதமர்

உக்ரைனில் நடைபெறும் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்கிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது.
இதில் கனடிய பிரதமர் Justin Trudeauவின் வருகையை உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy உறுதிப்படுத்தினார்.
உக்ரைனின் அமைதி, பாதுகாப்பு குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 13 வெளிநாட்டுத் தலைவர்களில் ஒருவரான Justin Trudeau அடங்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உக்ரேனிய ஜனாதிபதி இந்த பயணத்தை உறுதிப்படுத்தினார்.
ஆனாலும் கனடிய பிரதமர் அலுவலகம் இந்த பயணத்தை உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைன் – ரஷ்யா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனுக்கு பிரதமராக Justin Trudeau மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.
March 9 ஆம் திகதி அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில் அவரது இறுதி பயணமாகவும் இது அமையவுள்ளது.

Related posts

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – நீதன் சான்

Lankathas Pathmanathan

Conservative தலைமைக்கான சிறந்த மாற்றாக Jean Charest இருப்பார்: Patrick Brown

Lankathas Pathmanathan

Leave a Comment