Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பை முன்னாள் அமைச்சர் Chrystia Freeland அடுத்த வாரத்திற்குள் வெளியிடவுள்ளார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் Chrystia Freeland பெயர் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் தனது முடிவை முன்னாள் நிதியமைச்சர் Chrystia Freeland அடுத்த வாரத்திற்குள் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக Donald Trump பதவியேற்பதற்கு சில தினத்திற்கு முன்னர், கனடிய பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தனது எண்ணத்தை அமைச்சர் Chrystia Freeland அறிவிப்பார் என அவரது பிரச்சாரக் குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் வேட்பாளராக Chrystia Freeland வெளியிடும் முதல் கொள்கை வாக்குறுதி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump கனடிய இறக்குமதிகளுக்கு விதிக்க உறுதியளித்துள்ள வரிகளுடன் பொருந்தும் வகையில் அமெரிக்க இறக்குமதிகள் மீது வரிகளை விதிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகிய பின்னணியில் பிரதமர் Justin Trudeau பதவி விலகியிருந்தார் .
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என Liberal கட்சி ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.