Alberta முதல்வர் Danielle Smith அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Donald Trumpபை சந்தித்தார்.
சனிக்கிழமை (11) இந்த சந்திப்பு, அமெரிக்காவின் Florida மாநிலத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
“நாங்கள் ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தினோம்” என இந்த சந்திப்பு குறித்து Danielle Smith தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
இந்த சந்திப்பில் அமெரிக்கா – கனடா எரிசக்தி உறவின் பரஸ்பர முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
புதிய அமெரிக்க நிர்வாகத்தின் பல முக்கிய அதிகாரிகளுடன் உரையாடியதாகவும், “கனடாவுடன் ஒரு வலுவான எரிசக்தி, பாதுகாப்பு உறவுக்கு” அவர்கள் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் Danielle Smith தெரிவித்தார்.
அமெரிக்காவும் கனடாவும் சுதந்திரமான இரு நாடுகள் என குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலானது மிக முக்கியமான பாதுகாப்பு கூட்டணிகளில் ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.