Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பை கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney அடுத்த வாரம் வெளியிடவுள்ளார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் Mark Carney பெயரும் அடங்கியுள்ளது.
இந்த நிலையில் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் தனது முடிவை Mark Carney அடுத்த வாரம் இறுதி பகுதியில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
59 வயதான இவருக்கு ஏற்கனவே 30 க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
Liberal கட்சியின் ஒரு சாத்தியமான தலைமை வேட்பாளராக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த இவர், இந்த போட்டியில் முன்னணியில் உள்ள வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுவார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என Liberal கட்சி வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.