பிரதமர் Justin Trudeauவின் சேவைக்கு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden நன்றி தெரிவித்தார்.
கனடாவின் Liberal கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் திட்டத்தை பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில் திங்கள் மாலை கனடிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடியதாக Joe Biden தெரிவித்தார்.
கடந்த தசாப்தத்தில், பிரதமர் Justin Trudeau அர்ப்பணிப்பு, நம்பிக்கை, மூலோபாய பார்வையுடன் கனடாவை வழி நடத்தியுள்ளார் என Joe Biden குறிப்பிட்டார்.
அவரால் அமெரிக்க-கனடா கூட்டணி வலுவாக உள்ளது என கூறிய அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க, கனடிய மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் உலகம் சிறந்த ஒரு இடமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
“ஒன்றாக இணைந்து பல தசாப்தங்களில் எங்கள் நாடுகள் எதிர்கொண்ட சில கடினமான பிரச்சினைகளை நாங்கள் கையாண்டுள்ளோம்” எனவும் Joe Biden குறிப்பிட்டார்.
Justin Trudeauவை தனது நண்பர் என அழைப்பதில் பெருமை அடைகிறேன் என கூறிய Joe Biden, அவரது கூட்டாண்மை மற்றும் தலைமைக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் எனவும் தெரிவித்தார்.