தேசியம்
செய்திகள்

மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் கனடிய மத்திய வங்கி

கனடிய மத்திய வங்கி அடுத்த வாரம் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் புதன்கிழமை (07) மேலும் ஒரு வட்டி விகித உயர்வை கனடிய மத்திய வங்கி அறிவிக்கவுள்ளது.

புதன்கிழமை மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை கால் அல்லது அரை சதவீதம் உயர்த்தும் என எதிர்வு கூறப்படுகிறது.

தற்போது கனடிய மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதம் 3.75 சதவீதமாக உள்ளது.

இந்த ஆண்டு வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை அடுத்து, மத்திய வங்கி March மாதம் முதல் தொடர்ந்து ஆறு முறை அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

Related posts

தைவான் நில நடுக்கத்தில் காணாமல் போன கனடியர் மீட்கப்பட்டார்

Lankathas Pathmanathan

சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை

Lankathas Pathmanathan

இராணுவத்தினரின் உதவியுடன் மூடப்படவுள்ள ஆப்கானிஸ்தான் கனேடிய தூதரகம்!

Gaya Raja

Leave a Comment