கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
கனடா அமெரிக்காவுடன் இணையலாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trump பலமுறை பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் கனடாவை கையகப்படுத்த “பொருளாதார பலத்தை” பயன்படுத்த தயாராக இருப்பதாக Donald Trump கூறினார்.
ஆனாலும் Donald Trump பரிந்துரைத்துள்ள இந்த எண்ணம் நிறைவேறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என Justin Trudeau தெளிவுபடுத்தினார்.
இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களும் சமூகங்களும் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வர்த்தக, பாதுகாப்பு பங்காளியாக இருப்பதன் மூலம் பயனடைகின்றனர் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலம் என Donald Trump முன்வைத்த கருத்துக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly மறுப்பு தெரிவித்தார்.
கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது எது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லாததையே இந்த கருத்து காட்டுகிறது என குறிப்பிட்டார்