தொடரும் Canada Post வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை 10 மில்லியன் விநியோகங்கள் தவற விடப்பட்டன.
நாடு முழுவதும் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
வார இறுதியில் தொழிற்சங்கத்துடன் நடத்திய பேச்சுக்கள் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை மாத்திரம் கண்டுள்ளன என Canada Post பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தொழில்களை பாதுகாப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தொழிற்சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவ ஒரு சிறப்பு மத்தியஸ்தரை அரசாங்கம் நியமித்துள்ளது.