தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளை குழப்ப Conservative கட்சி முயல்கிறது?

நாடாளுமன்ற அமர்வுகளின் செயலிழப்பு எதிர்கால நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு காரணியாக அமையும் என NDP தெரிவித்தது.
NDP நாடாளுமன்ற குழு தலைவர் Peter Julian இந்த கருத்தை தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வுகளை குழப்ப Conservative கட்சி முயல்கிறது என Liberal நாடாளுமன்ற குழு தலைவர் Karina Gould குற்றம் சாட்டிய நிலையில் இந்த கருத்து வெளியானது.
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சி பலவற்றை நாடாளுமன்றத்தில் செய்ய விரும்புகிறது என Peter Julian தெரிவித்தார்.
Liberal அரசாங்கத்தின் ஊழல் குறித்த Conservative  கட்சியின் குற்றச்சாட்டுகளால் நாடாளுமன்ற  நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக எந்த விதமான நாடாளுமன்ற விவகாரங்களை அரசாங்கம் முன் வைக்கவில்லை.
இது  Liberal அரசாங்கத்தின் ஊழலின் விளைவு என Conservative  கட்சி கூறியது.
ஆனால் நாடாளுமன்றத்தில் தற்போதைய செயலிழப்பு தொடர்ந்தால், நம்பிக்கை வாக்களிப்பில் தமது நிலையில் மாற்றமடையலாம் என NDP கூறியுள்ளது.
மூன்று வாரங்களில் Conservative கட்சியின் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதில் தோல்வியடைந்துள்ளது.

Related posts

Vancouver தீவின் முன்னாள் வதிவிட பாடசாலையின் நிலப் பகுதியில் 17 அடையாளம் காணப்படாத கல்லறைகள்

Lankathas Pathmanathan

Torontoவில் வீட்டின் சராசரி விலை குறைந்தது

Lankathas Pathmanathan

COVID போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்கள் மூவர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment