முன்னாள் அமைச்சர் Francis Fox தனது 84 ஆவது வயதில் காலமானார்.
இவரது மரணத்தை பிரதமர் Justin Trudeau ஒரு அறிக்கையில் வெளியிட்டார்.
1972 இல் Quebec மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இவர், Pierre Elliott Trudeau அரசில் அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
இவர் solicitor general, தகவல் தொடர்பு அமைச்சர் – minister of communications – வெளியுறவுத்துறை செயலாளர்.- secretary of state – ஆகிய பதவிகளை வகித்தார்.
இவர் 12 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
1980 ஆம் ஆண்டு “O கனடாவை” கனடாவின் தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக மாற்றும் சட்டத்தையும் Francis Fox அறிமுகப்படுத்தினார்.
தகவல் அணுகல் சட்டத்தை – Access to Information Act – அறிமுகப்படுத்தியது இவரது முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
இவர் Telefilm கனடா உருவாக்கத்தையும் மேற்பார்வையிட்டார்.
Francis Fox, 2005இல் கனடாவின் Senate சபைக்கு நியமிக்கப்பட்டார்.
தனது பதவி காலம் முடிவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது 72ஆவது வயதில் அவர் பதவி விலகியிருந்தார்.
Francis Fox கனடிய அரசியலில் ஒரு அழியாத தடம் பதித்தார் என பிரதமர் Justin Trudeau தனது அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.