தேசியம்
செய்திகள்

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Ottawaவில் போராட்டங்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நகரின் மையப் பகுதியை விட்டு வெளியேறும் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்ததால், Ottawa காவல்துறை வியாழக்கிழமை (17) மாலை முதல் கைது நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை வரை 100க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாகவும், 21 வாகனங்களை இழுத்துச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வியாழன் இரவு போராட்டத் தொடரணியின் முக்கிய அமைப்பாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

46 வயதான Chris Barber, 49 வயதான Tamara Lich ஆகியோர் கைது செய்யப்பட்டதை Ottawa காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்

நீதிமன்றில் நிறுத்தப்பட்ட Barber, உடனடியாக Ottawaவை விட்டு வெளியேறி வேண்டும், முற்றுகை போராட்டங்களை ஆதரிக்க கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் வெள்ளி மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார்

Lichசின் பிணை விசாரணை சனிக்கிழமை காலை நடைபெற ஏற்பாடாகியுள்ளது

வெள்ளியன்று மேலும் இரண்டு அமைப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Pat King, Daniel Bulford ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் Bulford ஒரு முன்னாள் RCMP அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போது அதிகாரிகளை தாக்கியதாகவும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் ஒரு காவல்துறை அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக Ottawa காவல்துறை தலைவர் Steve Bell கூறினார்

காவல்துறை சேவை விலங்குக்கு வேண்டுமென்றே தீங்கு விளை வித்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வியாழன் இரவு காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளை அமைத்து, வெள்ளிக்கிழமை தமது நகர்வுகளுக்கு அடித்தளம் இட்டனர்.

தேசிய, மாகாண, மாநகர மட்டங்களில் அறிவிக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள் அனைத்தும் கைதுகளை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என Ottawa காவல்துறை தலைவர் கூறினார்.

அனைத்து போராட்டக்காரர்களும் அகற்றப்படும் வரை வெளியேற்ற நடவடிக்கையை 24 மணி நேரமும் தொடர்வுள்ளதாக அவர் வெள்ளி மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related posts

March 2023க்குள் 75 சதவீத கனடியர்கள் COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் மூன்றாவது கனேடியர் பலி

Lankathas Pathmanathan

Prince Edward தீவு விவசாயிகளுக்கு 28 மில்லியன் டொலர் உதவி திட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment