Ontario மாகாண Liberal கட்சியின் வருடாந்த மாநாடு கடந்த வார விடுமுறையில் நடைபெற்றது.
Liberal கட்சி தலைவி Bonnie Crombie தலைமையில் London நகரில் இந்த மாநாடு நடைபெற்று முடிந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் Bonnie Crombie தலைமை தாங்கும் முதலாவது மாநாடு இதுவாகும்.
அவர் தனது உரையின் பெரும்பகுதியை முதல்வர் Doug Ford, அவரது தலைமையிலான Progressive Conservative அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
Ontario மாகாணத்தில் நிர்ணயிக்கப்பட தேர்தல் திகதிக்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் Liberal கட்சியின் இந்த வருடாந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.