December 12, 2024
தேசியம்
செய்திகள்

Bay of Quinte மாகாண இடைத் தேர்தல் இந்த வாரம்

Ontario மாகாண Bay of Quinte தொகுதியில் மாகாண இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழக்கிழமை (19) நடைபெறுகிறது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் Todd Smith தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் Belleville  தொகுதி நகர சபை உறுப்பினர்கள் இருவர் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர்.

Progressive Conservative கட்சியின் வேட்பாளராக Tyler Allsopp, Liberal கட்சியின் வேட்பாளராக Sean Kelly ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக இந்த  இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Tyler Allsopp
Sean Kelly

NDP வேட்பாளராக Amanda Robertson போட்டியிடுகின்றார்.

பசுமை கட்சியின் வேட்பாளராக  Lori Borthwick அறிவிக்கப்பட்டுள்ளார்.

Amanda Robertson

இந்த இடைத் தேர்தலின் முன்கூட்டிய வாக்குப்பதிவு September 8 ஆரம்பித்து September 13 வரை நடந்தது.

முன்கூட்டிய வாக்குப்பதிவில் எதிர்பார்க்கப்பட்டதை போல்  குறைந்த எண்ணிக்கை வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது.

முன்கூட்டிய வாக்குப்பதிவில் தகுதியுள்ள வாக்காளர்களில் 7,885 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதாக Election Ontario தெரிவிக்கிறது.

இது தகுதியான வாக்காளர்களில் 8.1 சதவீதமாகும்.

Related posts

Ontarioவில் ஆசிரியர் பற்றாக்குறை 2027 ஆம் ஆண்டில் மோசமடையலாம்?

Lankathas Pathmanathan

தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் British Columbia மாகாணம்!

Gaya Raja

COVID தொற்று Ontarioவில் மீண்டும் பரவ ஆரம்பிக்கும் அறிகுறிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment