Air Canada விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம் என மத்திய தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலை நிறுத்தம் காரணமாக Air Canada நிறுவனம் வெள்ளிக்கிழமை (13) முதல் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பேச்சுவார்த்தைகள் மூலம் தவிர்க்கப்படலாம் என அமைச்சர் Steve MacKinnon கூறினார்
சில “குறிப்பிடத்தக்க சிக்கல்கள்” தீர்க்கப்படாமல் உள்ள போதிலும், இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Air Canada விமானிகள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான திட்டங்களில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (15) இருதரப்பு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஆரம்பிக்கும் நிலையில், புதன்கிழமைக்குள் (18) விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.