தேசியம்
செய்திகள்

பயங்கரவாத சந்தேக நபர் மாணவராக கனடாவிற்குள் நுழைந்தார்?

New Yorkகில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் கனடாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் மாணவராக கனடாவுக்கு வந்தவர் என தெரியவருகிறது.

கனடிய குடிவரவு அமைச்சர் Marc Miller செவ்வாய்க்கிழமை (10) இதனை உறுதிப்படுத்தினார்.

Shazeb Jadoon என்ற பெயரில் அறியப்படும் 20 வயதான Muhammad Shahzeb Khan என கடந்த வாரம் புதன்கிழமை (04) கைது செய்யப்பட்டார்.

கனடாவில் வசிக்கும் இவர், Brooklyn பெருநகரம் உள்ள யூத மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தும் திட்டத்துடன் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கனடிய காவல்துறையினரால் Quebec மாகாண எல்லைக்கு அருகில் வைத்து கடந்த வாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Muhammad Shahzeb Khan, June மாதம் 2023ஆம் ஆண்டு மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்ததாக குடிவரவு அமைச்சர்  உறுதிப்படுத்தினார்.

இவர் June 24, 2023 அன்று Toronto Pearson சர்வதேச விமான நிலையம் வழியாக கனடாவிற்குள் நுழைந்ததாக அமைச்சர் Marc Miller தெளிவுபடுத்தினார்.

இவருக்கான மாணவர் விசா May 2023இல் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

Related posts

Ottawa முன்னாள் துணை காவல்துறை தலைவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தல்

Lankathas Pathmanathan

Fiona புயலின் விளைவாக குறைந்தது மூவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment