இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
ஆனாலும் 2025இல் தேர்தல் ஒன்று நடைபெறுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
Ontario மாகாணத்தின் அடுத்த நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதி June 2026 ஆகும்.
ஆனாலும் முன் கூட்டிய தேர்தல் குறித்த கேள்வியை Doug Ford தொடர்ந்தும் தவிர்த்து வருகிறார்.
இந்த ஆண்டு தேர்தல் ஒன்று நடைபெறப் போவதில்லை என செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முடிவை எதிர்வரும் December மாத காலக்கெடுவுக்குள் எடுக்க வேண்டும் என Doug Ford கோரியுள்ளார்.
Doug Ford தலைமையிலான Progressive Conservative அரசாங்கம் 78 மாகாண சபை உறுப்பினர்களை கொண்டுள்ளது.