தமிழ் One தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது ஒரு நாசகார செயல் என SV Media வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
“தமிழ் one தொலைக்காட்சி வாகனம் எரிக்கப்பட்டது போன்ற வன்முறை செயற்பாடுகளை நாம் முற்றாக கண்டிக்கின்றோம்” அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
SV Media நிறுவனத்தின் ஊடக நிறுவனமான தமிழ் One தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வாகனம் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 6:30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு தமது ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் SV Media தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளியாகிவரும் சில தவறான கருத்துக்களுக்கும் இந்த அறிக்கையில் மறுப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SV Media வெளியிட்ட முழுமையான ஊடக அறிக்கையை வாசிக்க:
Media Statement August 29, 2024