தேசியம்
செய்திகள்

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி நிகழ்வில் நடைபெற்ற போராட்டத்திற்கு CTC கண்டனம்!

Brampton நகரில் அமையவிருக்கும்  தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி அடிக்கல் நாட்டு நிகழ்வில் நடைபெற்ற போராட்டத்தை கனடிய தமிழர் பேரவை (CTC) கண்டித்துள்ளது.

Bramptonனில் தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி அடிக்கல் நாட்டுவிழாவை எதிர்ப்பாளர்கள் சீர்குலைத்ததை கண்டிக்கின்றது என வெள்ளிக்கிழமை (16) வெளியிட்ட அறிக்கையில் CTC தெரிவித்துள்ளது.

Brampton நகரில் அமையவிருக்கும்  தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கான அடிக்கல் புதன்கிழமை (14) நாட்டப்பட்டது.

இலங்கை கொடியை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் குழு ஒன்று அடிக்கல் நாட்டு விழாவை சீர்குலைத்தது குறித்து CTC கவலை வெளியிட்டுள்ளது.

இந்த எதிர்ப்பின் அச்சுறுத்தும் தன்மையை கண்டித்துள்ள CTC, தமிழ் இனப்படுகொலையை ஒப்புக்கொள்வது நல்லிணக்கத்திற்கான ஒரு முக்கியமான படி என்பதை இந்த எதிர்ப்பாளர்கள் அங்கீகரிக்கத் தவறியது ஏமாற்றமளிக்கிறது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி அமைக்கும் முயற்சியை கைவிடுமாறு கோரும் இரண்டு கடிதங்களை கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo Brampton நகர முதல்வர் Patrick Brownக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளார்.

கடந்த May மாதம் இந்த விடயம் குறித்து எழுதிய கடிதத்தில், இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்த CTC போன்ற தமிழ் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை இந்த நினைவுத் தூபி அமைக்கும் முயற்சி தடம்புரளச் செய்யும் என கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் எச்சரித்திருந்தார்.

இந்தக் கடிதத்தின் பிரதியை தேசியம் பிரத்தியேகமாக செவ்வாய்க்கிழமை (13) வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் அதே நாள் (செவ்வாய்) கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo Brampton நகர முதல்வர் Patrick Brownக்கு மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்திலும் நினைவுத் தூபி அமைக்கும் முயற்சியை கைவிடுமாறு Thushara Rodrigo வலியுறுத்தியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் பிரதியொன்றையும் தேசியம் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைவு தூபிக்கு அடிக்கல் நாட்டு நிகழ்வில் Patrick Brown குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசின் இந்த முயற்சியை கனடாவில் வெளிநாட்டு தலையீடாக கருத இடம் உள்ளது என கனடிய தமிழர் கூட்டு இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் பிரச்சாரத்தில் Trudeau மீது சரளைக் கல் வீச்சு – காவல்துறை விசாரணை!

Gaya Raja

25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?

Gaya Raja

தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் தாக்கல்: Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment