இஸ்ரேலில் இருந்து தனது இராஜதந்திரிகளின் குழந்தைகளையும் அவர்களின் பாதுகாவலர்களையும் வெளியேற்ற கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கனடிய இராஜதந்திரிகளின் குழந்தைகள், அவர்களின் பாதுகாவலர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் போர் குறித்த அச்சத்திற்கு மத்தியில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது.
ஆனாலும் தூதரக ஊழியர்கள் இஸ்ரேலில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tel Avivவில் உள்ள இஸ்ரேலுக்கான கனடா தூதரகம், Beirutடில் உள்ள லெபனானுக்கான கனடா தூதரகம், பாலஸ்தீனிய அதிகாரத்திற்கான கனடாவின் பிரதிநிதி அலுவலகம் ஆகியவை முழுமையாக செயல்பட்டு, தூதரக சேவைகள் உட்பட கனடியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்குகின்றன என கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுகிறது
ஆயுத மோதல் காரணமாக தோன்றியுள்ள கணிக்க முடியாத பாதுகாப்பு நிலைமை காரணமாக இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை எச்சரித்தது.
West Bank, காசா பகுதி, ஜெருசலேம், லெபனான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராகவும் கனடிய அரசாங்கம் அறிவுறுத்துகிறது