தேசியம்
செய்திகள்

Jasper தேசிய பூங்காவில் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர் மரணம்

Jasper தேசிய பூங்காவில் காட்டுத்  தீயில் சிக்கி தீயணைப்பு வீரர் மரணமடைந்தார்.

காட்டுத்  தீயை எதிர்த்து போராடிய Alberta மாகாண தீயணைப்பு வீரர் மரணமடைந்தார்.

24 வயதான இவர் Jasper வடகிழக்கில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

சனிக்கிழமை (03) மாலை இவர் காயமடைந்தார் என தமக்கு தகவல் கிடைத்ததாக RCMP தெரிவித்தது.

இவர் மரணமடைந்ததை RCMP பின்னர் உறுதிப்படுத்தியது.

ஆனாலும் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

அவர் Calgary நகரில் வசிப்பவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கனடிய பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Danielle Smith ஆகியோர் இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் சென்றடைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment