September 18, 2024
தேசியம்
செய்திகள்

தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்

1 இலட்சத்தி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனடியர்கள் கடந்த December மாதம் வெளிநாட்டிலிருந்து கனடா திரும்பியுள்ளனர்.

இன்று (செவ்வாய்) வெளியான கனடிய புள்ளி விபரத் திணைக்கள அறிக்கையின் மூலம் இந்த விபரம் வெளியானது. வெளிநாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு கனடிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள போதிலும் பெருமளவிலானவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

November மாதத்தை விட December மாதம் வெளிநாட்டிலிருந்து கனடா திரும்பிய கனடியர்களின் எண்ணிக்கை அதிகம் என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. December மாதம் 1 இலட்சத்தி 70 ஆயிரத்து 700 கனடியர்கள் நாடு திரும்பியதாகவும் இது November மாதத்தை விட 33.7 சதவீத அதிகரிப்பு எனவும் தெரியவருகின்றது.

Related posts

தைவான் நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் இல்லை: Dr. Theresa Tam

Lankathas Pathmanathan

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment