February 22, 2025
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympic: மூன்றாவது தங்கம் வென்ற கனடியர்

Olympic போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வென்ற முதலாவது கனடியர் என்ற பெருமையை Summer McIntosh பெறுகிறார்.

2024 Paris Olympics போட்டியில் Summer McIntosh சனிக்கிழமை (03) தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Toronto நீச்சல் வீராங்கனையான இவர், 200 மீட்டர் தனிநபர் medley நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு நிமிடங்கள் 6.56 வினாடிகள் என்ற புதிய Olympic சாதனை நேரத்தையும் அவர் பதிவு செய்தார்.

Summer McIntosh ஏற்கனவே, 400 மீட்டர் medley, 400 மீட்டர் butterfly நீச்சல் போட்டிகளில் இம்முறை Olympic தங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

இவரது பதக்கம் இம்முறை Olympic போட்டியில் அவர் வெற்றி பெறும் நான்காவது புதக்கமாகும்.

இதுவரை கனடா நான்கு தங்கம், மூன்று வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் பதினான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

வியாழக்கிழமை மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு

Lankathas Pathmanathan

Meta தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய அரசு முடிவு

Lankathas Pathmanathan

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25

Lankathas Pathmanathan

Leave a Comment