தேசியம்
செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

வெற்றிடமாக உள்ள Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார்.

Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது.

இதில் முதலாவது தினம் தமது பெயர்களை வேட்பாளராக பதிவு செய்தவர்களில்  Evan சாம்பசிவம் என்ற தமிழரும் அடங்குகிறார்.

இவர் முன்னரும் நகரசபை வேட்பாளராக போட்டிட்டவராவார்.

நீண்ட கால நகர சபை உறுப்பினர் Jaye Robinson புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து அவரது பதவி வெற்றிடமானது.

இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் September 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

July 23 காலை 6 மணிவரை இந்த இடைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் November 4ஆம் திகதி நடைபெறுகிறது.

இங்கு முன்கூட்டிய வாக்குப்பதிவு October 26, 27ஆம் திகதிகளில் நடைபெறும்.

Related posts

உக்ரேனியர்களுக்கு உதவ போலந்துக்கு படைகளை அனுப்பும் கனடா!

Lankathas Pathmanathan

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

Ontarioவில் மீண்டும் 800 வரை தாண்டிய நாளாந்த தொற்றுக்கள்

Gaya Raja

Leave a Comment