தேசியம்
செய்திகள்

கனடா தின வானவேடிக்கை இரத்து!

Montreal நகரில் சனிக்கிழமை (01) இரவு திட்டமிடப்பட்ட கனடா தின வானவேடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகள் தொடரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் தொடரும் காட்டுத்தீ காரணமாக கனடா தினத்திற்கு திட்டமிடப்பட்ட வானவேடிக்கைகள் பல இரத்து செய்யப்படும் நிலை தோன்றியுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

கனடா முழுவதும் காட்டுத் தீயின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளது.

இந்த காட்டுத்தீயின் எதிரொலியாக ஏற்படும் புகை மூட்டம் காரணமாக, சில நகரங்களில் கனடா தின வான வேடிக்கைகள் இரத்து செய்யப்படுகின்றன.

Related posts

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

Lankathas Pathmanathan

COVID தனிமைப்படுத்தல் விதிகளை Alberta அகற்றுகிறது!

Gaya Raja

Conservative கட்சியின் ,மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley இராஜினாமா!

Gaya Raja

Leave a Comment