தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு தடுப்பூசிகளை அனுப்ப முன்வரும் அமெரிக்காவுக்கு கனடிய பிரதமர் நன்றி

கனடாவுக்கு 1.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை அனுப்ப முன்வந்துள்ள அமெரிக்கா வுக்கு கனடிய பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுக்கு தனது நன்றியை கனடிய பிரதமர்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிர்வாகத்துடன் இந்த AstraZeneca தடுப்பூசியின் பகிர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் கனடிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த தொற்றில் இருந்து வெளியேறும் பாதை தடுப்பூசிகள் மட்டுமே எனவும் நேற்று நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் Trudeau கூறினார்.

இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டால், கடன் அடிப்படையில் அமெரிக்கா இந்த மாத இறுதிக்குள் 1.5 மில்லியன் தடுப்பூசியை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related posts

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

Scarborough வீதி விபத்தில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயம்!

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

Leave a Comment