Ontario COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லையை 75ஆக குறைகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வயது வரம்பை குறைக்க Ontario முடிவு செய்துள்ளது. நேற்று மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இதன் மூலம் 75 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மாகாணத்தின் இணைய முன்பதிவை பயன்படுத்தி தடுப்பூசிக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றது. தற்போது, 80 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மாகாணத்தின் இணைய முன்பதிவை பயன்படுத்தி தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.