தேசியம்
செய்திகள்

கனேடியர்களுக்கு எதிரான சீனாவின் நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை: பிரதமர் Trudeau கண்டனம்

நீண்ட காலமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையை கனேடிய பிரதமர் கடுமையாக கண்டித்துள்ளார்.

சீனாவில் கனேடியர்களான Michael Spavor மற்றும் Michael Kovrig ஆகியோருக்கான நீதிமன்ற விசாரணைகளில் இல்லாத வெளிப்படைத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை கூறினார். இவர்கள் இரு வரையும் மீண்டும் கனடா வரவழைப்பதற்கான முயற்சிகளின் தனது அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடும் எனவும் அவர் கூறினார்.

Michael Spavorவுக்கு எதிரான நீதிமன்ற விசாரணை நேற்று முடிவடைந்தது. Michael Kovrigவுக்கு எதிரான விசாரணை எதிர்வரும் திங்கள்கிழமை (நாளை மறுதினம் ) நடைபெறவுள்ளது. இந்த இரண்டு விசாரணைகள் குறித்த தீர்ப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

சீன அரசுக்கு எதிரான உளவு குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு December மாதம் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

Related posts

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

Quebec பனிப்பொழிவு காரணமாக மின்சாரத்தை இழந்த 106,000 வீடுகள்!

Lankathas Pathmanathan

0.5 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment