தேசியம்
செய்திகள்

பணிக்குத் திரும்பிய LCBO ஊழியர்கள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த LCBO ஊழியர்கள் திங்கட்கிழமை (22) பணிக்குத் திரும்பினர்.

Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியமும் (LCBO) அதன் 10,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Ontario பொது சேவை ஊழியர் சங்கமும் (OPSEU) சனிக்கிழமை (20) ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டினர்.

இந்த நிலையில் ஊழியர்கள் திங்கட்கிழமை பணிக்குத் திரும்பினர்.

மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் வணிகத்திற்காக செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த தற்காலிக உடன்பாட்டை LCBO தொழிலாளர்கள் அங்கீகரித்துள்ளனர்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

மாணவர் கல்வி கடன் வட்டியை நிறுத்திய கனேடிய மத்திய அரசு

Gaya Raja

CTC ஆலோசனை சபை உறுப்பினர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment