தேசியம்
Uncategorizedசெய்திகள்

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

நாடளாவிய ரீதியில் புதிய COVID தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வியாழக்கிழமை (09) மொத்தம் 4,271 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
Quebecகில் 1,807 புதிய தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவானது.
Ontarioவில் சுகாதார அதிகாரிகள் 1,290 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர்.
இது May மாதத்திற்கு பின்னர் பதிவான ஒரு நாளுக்கான அதிக தொற்றுகளின் எண்ணிக்கையாகும்.
கடந்த வாரம் 851ஆக இருந்த Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி வியாழக்கிழமை 1,055ஆக அதிகரித்தது.
10 புதிய இறப்புகளும் Ontarioவில் பதிவாகின.
Ontarioவில் 11.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
British Columbiaவில் 341 தொற்றுகளும் ஒன்பது மரணங்களும், Albertaவில் 333 தொற்றுகளும்,
Manitobaவில் 203 தொற்றுகளும் மூன்று மரணங்களும் பதிவாகின.
New Brunswick மாகாணம் ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது.
174 தொற்றுகளும் இரண்டு மரணங்களும் New Brunswick  சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் வியாழக்கிழமை தலா 100க்கும் குறைவான தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Related posts

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்ய வாக்களித்த நெறிமுறைக் குழு

Lankathas Pathmanathan

பிரதமர் பதவி ஆபத்தில்? – மறுக்கும் Justin Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment