தேசியம்
செய்திகள்

COVID அவசரகால நடவடிக்கைகள் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க சவால்கள் அடையாளம் காணப்பட்டன: கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை

கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைகள் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க சவால்கள் அடையாளம் காணப்பட்டதாக வியாழக்கிழமை (09) வெளியிடப்பட்ட தனது அறிக்கையில் கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் Karen Hogan தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் கனடிய எல்லையில் COVID கட்டுப்பாடுகளை அமல்படுத்த கனடாவின் பொது சுகாதார நிறுவனம் பெரும் சவால்கள் எதிர்கொண்டது என தனது அறிக்கையில் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்வதில் தோல்விகள் எதிர்கொள்ள பட்டதாகவும் அவர் கூறினார்.

தவிரவும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் உண்மையில் அவ்வாறு செய்தார்களா என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை இருந்ததாகவும் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கனடாவுக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பயணிகள் COVID பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவையை அமல்படுத்துவதில் உள்ள பெரிய குறைபாடுகளை அவர் குறிப்பிட்டார்.

75 சதவீத விமானப் பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பது தெளிவாக தெரியவில்லை என அவரது அறிக்கை கூறுகிறது

சர்வதேச நாடுகளில் இருந்து வந்த அனைத்து பயணிகளும் அவர்களின் கட்டாய COVID சோதனைகளை முடிக்கவில்லை எனவும் கணக்காய்வாளர் நாயகம் கண்டறிந்தார்.

Related posts

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

அழுத்தங்களை எதிர்கொள்ளும் கனடிய இராணுவம்

Lankathas Pathmanathan

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

Leave a Comment