கனடாவின் பாதுகாப்புச் செலவீனங்களை அமெரிக்க கடுமையாக விமர்சித்துள்ளது.
NATO உச்சி மாநாடு Washington நகரில் நடைபெறும் நிலையில் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கிறார்
கனடாவின் பாதுகாப்புச் செலவு வெட்கக்கேடானது என அமெரிக்க சபாநாயகர் Mike Johnson விமர்சித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்கும் NATO எதிர்பார்ப்பை கனடிய அரசாங்கம் எட்டாதது குறித்த விமர்சனங்களை Justin Trudeau எதிர்கொள்கிறார்.
32 NATO உறுப்பினர்களில், 23 நாடுகள் இரண்டு சதவீத எதிர்பார்ப்பை எட்டியுள்ளன.
கனடா தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.37 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுகிறது.
இது 32 நாடுகள் பட்டியலின் கனடாவை 27 ஆவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
இராணுவ உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்து, அதிக ஆயுதங்கள், உபகரணங்களை உற்பத்தி செய்வதன் மூலம் இராணுவ தயார் நிலையை அதிகரிக்க கனடா மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
தனது தலைமையில் ஆட்சியை பொறுப்பேற்றபோது. கனடா ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக பாதுகாப்புக்காக செலவிட்டது என Justin Trudeau சுட்டிக் காட்டினார்.
2030 ஆம் ஆண்டுக்குள், கனடா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.76 சதவீதத்தை இராணுவத்திற்காக செலவிடும் என தேசிய பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.