தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகல்!

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகுகிறார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Jonathan Pedneault அறிவித்தார்.

Ottawaவில் பசுமைக் கட்சி தலைவர் Elizabeth Mayயுடன் இணைந்து அவர் இந்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை (09) வெளியிட்டார்.

தனது முடிவு குறித்து மேலும் கருத்து எதுவும் தெரிவிக்கப் போவதில்லை என அவர் கூறினார்.

Elizabeth May, Jonathan Pedneault ஆகியோர் இணைந்து 2022இல் பசுமைக் கட்சியின் தலைமைப் பதவியை வெற்றி பெற்றனர்.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் முறையே தலைவராகவும், துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தனர்.

Elizabeth May பசுமைக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.

அவர் British Colombia மாகாணத்தின் Saanich-Gulf Islands தொகுதியை 2011 முதல் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

Jonathan Pedneault, 2023 இடைத் தேர்தலில் Quebec மாகாணத்தின் Notre-Dame-de-Grâce–Westmount தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Related posts

தாயில்லாமல் திருப்பி அனுப்பப்படவுள்ள சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள்

Lankathas Pathmanathan

பெயர் மாற்றம் பெறும் Ryerson பல்கலைக்கழகம்  

Lankathas Pathmanathan

மகாராணியை மெய்நிகரில் சந்தித்த புதிய ஆளுநர் நாயகம்!

Gaya Raja

Leave a Comment