December 12, 2024
தேசியம்
செய்திகள்

Montreal கனடா தின பேரணி இரத்து

Montreal நகரின் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது.

கனடா தின பேரணிக்கு அனுமதி பெறுவதில், நிதி பெறுவதில், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதிலும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Montreal நகரின் கனடா தின பேரணி 1970 களின் பிற்பகுதியில் இருந்து நடைபெறுகிறது.

ஆனால் பெருந்தொற்று காரணமாக 2020 முதல் 2022 வரை பேரணி இரத்து செய்யப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது.

பாதுகாப்பு, காப்புறுதி செலவுகள் அதிகரித்து வருவது இதற்கான பிரதான காரணியாக சுட்டிக் காட்டப்படுகிறது.

Related posts

Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் நிலை: புதிய கருத்து கணிப்புகள்

Lankathas Pathmanathan

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

Lankathas Pathmanathan

NDP முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமற்றது: Doug Ford!

Lankathas Pathmanathan

Leave a Comment