தேசியம்
செய்திகள்

வெளிநாடுகளுடன் கூட்டுச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத் துரோகிகள்: Jagmeet Singh

கனடாவுக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத் துரோகிகள் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உதவி செய்ததாக உளவுத்துறையின் அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது.

இந்த அறிக்கையை Jagmeet Singh அண்மையில் வாசித்திருந்தார்.

கனடிய அரசியலில் தலையிட வெளிநாட்டு அரசுகளின் முயற்சிகளுக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவினார்கள் என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது என Jagmeet Singh கூறினார்.

அவர்கள் செய்வது நெறிமுறையற்றது என NDP தலைவர் சுட்டிக் காட்டினார்.

இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருப்பது  பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்துக்கள் பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May வெளியிட்ட கருத்துக்களுக்கு மாறாக உள்ளன.

பசுமைக் கட்சியின் தலைவரும்  இந்த அறிக்கையை முழுமையாக  பார்த்துள்ளார்.

இந்த அறிக்கையில் கனடாவுக்கு விசுவாசமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இல்லை என Elizabeth May கூறினார்.

வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒத்துழைத்ததாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc இதுவரை மறுத்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja

Liberal கட்சி தோல்வி – இணைந்தன எதிர்கட்சிகள்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் விரைவில் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment