கனடாவின் 2024- 2028 இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியாகியுள்ளது.
இனவெறி, பாகுபாடுகளுக்கு எதிரான திட்டமாக இது அமைகிறது.
கனடாவின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம், மாற்றுத் திறனாளிகள் அமைச்சர் Kamal Khera இந்த திட்டத்தை சனிக்கிழமை (08) வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சர் கரி ஆனந்தசங்கரியும் கலந்து கொண்டார்.
மாற்றும் அமைப்புகள், வாழ்க்கையை மாற்றுதல்: கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் 2024 – 2028 என இந்த திட்டம் பெயரிடப்பட்டுள்ளது.
கனடாவின் புதிய இனவெறி எதிர்ப்பு திட்டம் வேலை வாய்ப்பு, நீதி, சட்ட அமலாக்கம், வீட்டு வசதி, சுகாதாரம், குடியேற்ற அமைப்புகளில் உந்து நடவடிக்கையை நோக்கமாகக் கொண்ட $110.4 மில்லியன் முதலீடு ஆகும்.
கனடிய அரசாங்கம் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் ஆகிய விடயங்களில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் Kamal Khera தெரிவித்தார்.
கனடாவையும் உலகையும் ஒரு சிறந்த இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம் எனவும் அவர் கூறினார்.