தேசியம்
செய்திகள்

CBSA ஊழியர்கள் இந்த வாரம் வேலை நிறுத்தம்?

உடன்பாடு ஏற்படவில்லை என்றால் CBSA  வேலை நிறுத்தம்  வெள்ளிக்கிழமை (14) ஆரம்பிக்கும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால், கனடா எல்லை சேவை முகமையக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தம் செய்வார்கள் என தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் திங்கட்கிழமை (10) தெரிவித்துள்ளது.

கனடாவின் பொதுச் சேவை கூட்டணி (Public Service Alliance of Canada – PSAC), சுங்க, குடிவரவு ஒன்றியம் (Customs and Immigration Union – CIU) ஆகியன வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

PSAC, CIU இணைந்து 9,000க்கும் மேற்பட்ட CBSA தொழிலாளர்களை பிரதிநிதிகளாக கொண்டுள்ளது.

உடன்பாடு எட்டப்படாவிட்டால், வேலை நிறுத்த நடவடிக்கை June 14 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

June 7ஆம் திகதி 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட இருந்த வேலை நிறுத்த நடவடிக்கை பேச்சுவார்த்தைகளை தொடர அனுமதிக்கும் வகையில் June 12ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் மூலம் சாத்தியமான இடையூறுகளைத் தவிர்க்க முடியும் என நம்புவதாக PSAC தலைவர் கூறினார்.

CBSA  ஊழியர்களின் வேலை நிறுத்தம் நாடு முழுவதும் எல்லைக் கடப்புகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதுபோன்ற ஒரு வேலை நிறுத்தம் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என நிதி அமைச்சர் Chrystia Freeland கடந்த வாரம் தெரிவித்தார்.

June 2022 முதல் CBSA தொழிலாளர்கள் ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario பாடசாலைகள் மீண்டும் நேரடி கல்விக்கு திறக்கும் திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு கற்றலுக்குத் திரும்புவார்கள்: British Colombia

Lankathas Pathmanathan

ஐந்து ஆண்டுகளில் Toronto வீட்டு விலைகள் 42 சதவீதம் – வாழ்க்கைச் செலவு 17 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment