வடக்கு Ontarioவில் காவல்துறையினரின் படகுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை (07) Sudbury நகரில் Nepewassi ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
Ontario மாகாண காவல்துறை ஓட்டிச் சென்ற படகுடன் இந்தப் பெண் பயணித்த படகு மோதியது.
இதில் காயமடைந்த 49 வயதான பெண் உயிரிழந்தார்.
மரணமடைந்த பெண் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
Ontario மாகாணத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.