McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர்.
James நிர்வாகக் கட்டிடத்தில் தங்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் போராட்டக்காரர்கள் ஒரு தடுப்பை ஏற்படுத்த ஆரம்பித்த நிலையில் Montreal காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இனப்படுகொலையாளர்களுடன் McGill உறவுகளை துண்டிக்க வேண்டும் என பாலஸ்தீனிய மனித உரிமைகளுக்கான ஒற்றுமை அமைப்பு கோரி போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்த போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த நிலையில் இனப்படுகொலைக்கு எதிரான கொள்கைக்கான மாணவர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் பல்கலைக்கழகம் ஒடுக்கியுள்ளது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.