தேசியம்
செய்திகள்

தொற்றின் நான்காவது அலைக்குள் கனடா : வைத்தியர்களின் புதிய எச்சரிக்கை!

கனடா COVID தொற்றின் நான்காவது அலைக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

புதன்கிழமை வரையிலான தரவுகளின் படி புதிய தொற்றுகளுக்கான கனடாவின் ஏழு நாள் சராசரி 1,300ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை விட 60 சதவீதம் அதிகரிப்பாகும்.

புதிய தொற்றுகளின் பெரும்பகுதி British Columbiaவில் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமைவரை British Columbiaவில் மாத்திரம் 1,500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவாகின.

May மாதம் நடுப்பகுதியின் பின்னர் அதிக எண்ணிக்கையில் ஒரு நாளுக்கான புதிய தொற்றுக்கள் புதன்கிழமை British Colombiaவில் பதிவாகின.

தவிரவும் Alberta, Saskatchewan, Ontario, Quebec ஆகிய மாகாணங்களிலும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது.

தடுப்பூசி போடப்படாதவர்கள் புதிய தொற்றுக்களின் பெரும்பகுதியாக உள்ளனர் என கனேடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. தடுப்பூசி வழங்கல் கடந்த December மாதம் ஆரம்பித்ததில் இருந்து, புதிதாக பதிவாகும் தொற்றுகளில் 90 சதவீதம் தடுப்பூசி போடப்படாதவர்கள் என கனேடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகின்றது.

Related posts

தேர்தல் வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்களா? – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு!

Gaya Raja

பிரதமரின் கருத்தை மறுக்கும் சுகாதார அமைச்சரின் கருத்து

Lankathas Pathmanathan

Torontoவின் புதிய நகர முதல்வர் Olivia Chow

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!