தேசியம்
செய்திகள்

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது நபர் மரணம்

Rexdale நகரில் இந்த வார ஆரம்பத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மரணமடைந்தார்.

Rexdale நகரில் North Albion உயர்நிலைப் பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார் – நால்வர் காயமடைந்தனர்.

இவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பலியான இரண்டாவது நபரின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை.

ஆனாலும் இவர் 46 வயதான Seymour Gibbs என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

சம்பவ தினத்தன்று 61 வயதான Delroy “George” Parkes இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மரணமானார்.

காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

இந்த துப்பாக்கிச் சூடு தற்செயலாக நடந்திருக்கலாம் எனவும் இதனுடன் தொடர்புடைய  வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்?

Lankathas Pathmanathan

ருவாண்டாவில் தூதரகம் ஒன்றை திறக்கும் கனடா

Lankathas Pathmanathan

கனேடிய இராணுவ செலவினங்களை பிரதமர் நியாயப்படுத்தினார்

Leave a Comment