Air Canada இந்தியாவிற்கான தனது விமான சேவையை விரிவுபடுத்துகிறது.
Torontoவில் இருந்து மும்பைக்கு இடைநில்லா விமான சேவையை Air Canada வழங்கவுள்ளது.
Torontoவில் இருந்து மும்பைக்கு புதிய இடை நில்லா சேவை உட்பட, இந்த ஆண்டு இந்தியாவுக்கான தனது விமான சேவைகளை விரிவுபடுத்துவதாக Air Canada தெரிவித்துள்ளது.
Toronto – மும்பை இடையே October 27 முதல் வாரத்திற்கு நான்கு முறை இந்த இடை நில்லா விமான சேவை இயக்கப்படும் என Air Canada விமான நிறுவனம் கூறுகிறது.
மேலதிகமாக Air Canada தனது சேவையை Montreal நகரில் இருந்து டெல்லிக்கு தினசரி சேவையாக அதிகரிக்கிறது.
மேற்கு கனடாவில் இருந்து பயணிப்பவர்களுக்கு, October 27 முதல் London இங்கிலாந்து வழியாக Calgary நகரில் இருந்து டெல்லிக்கு நாளந்தம் பருவகால விமான சேவைகளை Air Canada வழங்கவுள்ளது.
இந்த குளிர்காலத்தில் Vancouver நகரில் இருந்து London இங்கிலாந்து செல்லும் விமானங்கள், டெல்லிக்கு செல்லும் விமானங்களுடன் இணைக்கப்படும் வகையில் திட்டமிடப்படும் என Air Canada நிறுவனம் தெரிவித்தது.
மொத்தமாக இந்தியாவிற்கு 25 வாராந்த விமானங்களை இயக்குவதாக Air Canada தெரிவித்துள்ளது.