கனடா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் 11 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தித்தனர்.
கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair, சீனா பாதுகாப்பு அமைச்சர் Admiral Dong Jun இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
2013 ஆம் ஆண்டின் பின்னர் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பில் கனடிய தேர்தலில் சீனா தலையிடுவதற்கு எதிராக சீனாவை எச்சரித்ததாக அமைச்சர் Bill Blair சனிக்கிழமை (01) தெரிவித்தார்.
இரண்டு நாடுகளின் தகவல் தொடர்பு வழிகளை மீண்டும் நிறுவுவதற்கான முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
சீனாவின் வெளிநாட்டு தலையீடு, ரஷ்யாவிற்கான நிதி, பொருளாதார ஆதரவு, தைவானில் அதன் அண்மைய இராணுவ பயிற்சிகள் குறித்து கனடாவின் கவலைகளை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தியதாக Bill Blair கூறினார்.