Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
Montreal நகருக்கு தெற்கில் ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தின் விளைவாக நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை (01) இரவு Quebec மாகாணத்தின் St-Constant நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்திற்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை.
ஆனால் அங்கு ஒரு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது.
காயமடைந்தவர்களின் நிலை குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.