தேசியம்
செய்திகள்

ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு கனடிய பிரதமர் கண்டனம்

கனடியர் ஒருவர் உட்பட ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்களுக்கு கனடிய பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (01) இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் World Central Kitchen தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஏழு உதவிப் பணியாளர்கள் பலியாகினர்.

பலியான கனடியர் 33 வயதான Jacob Flickinger என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.
இந்த தாக்குதல் ஒரு சோகமான தவறு என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu வர்ணித்தார்.

ஆனாலும் இது போன்ற தாக்குதல்கள் தாமாக நடைபெறுவதில்லை என வியாழக்கிழமை (04) Winnipeg நகரில் நடைபெற்ற நிகழ்வின் போது கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

இந்த தாக்குதல் குறித்த விசாரணைக்கு Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார்

ஆனாலும் இந்த விசாரணைக்கு மூன்றாம் தரப்பு பொறுப்பேற்க வேண்டுமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை.

கடந்த October மாதம் ஆரம்பித்த போரின் பின்னர் இதுவரை 196 மனிதாபிமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Related posts

மீண்டும் முடங்குகிறது Ontario – அறிவிக்கப்பட்டது அவசர கால நிலை

Gaya Raja

கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்கும் அமெரிக்கா

Lankathas Pathmanathan

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

Leave a Comment