September 11, 2024
தேசியம்
கட்டுரைகள்

முழு சூரிய கிரகணம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கனடியர்கள் திங்கட்கிழமை (April 8) முழு சூரிய கிரகணத்திற்கு – total solar eclipse – தயாராகி வருகின்றனர்.

இது பலருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவமாக இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள பலர் இந்த அரிய நிகழ்வைக் காண திட்டமிட்டுள்ளதால் பல நகரங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Ontario, Quebec மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகள் April 8ஆம் திகதி மூடப்பட்டிருக்கும்.

சிலர் தமது வேலையில் இருந்து ஒரு நாள் விடுப்பு எடுக்கின்றனர்.

Torontoவில் இந்து ஆலயங்கள் பல சூரிய கிரகணம் காரணமாக மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளன.

இதற்கிடையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை எதிர்பார்க்கும் Niagara பிராந்தியத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது, ​​பூமியின் மீது நிழல்படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது என கனடிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழு சூரிய கிரகணம் (total solar eclipse) என்பது பூமி, சூரியனுடன் சந்திரன் சரியாக இணைவதால், சூரிய ஒளியை முற்றிலுமாக தடுத்து சிறிது நேரம் இருளில் மூழ்கடிக்கும்.

பகுதி சூரிய கிரகணத்தில் (partial solar eclipse) சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே தடுக்கிறது.

ஆனால் எந்த கிரகணமும் சூரியன் முழுவதுமாக மறைந்திருக்காத போது பகுதி கிரகணமாக ஆரம்பித்து பகுதி கிரகணமாக முடிவடையும்.

சூரிய கிரகணம் பொதுவான ஒன்றா?

பொதுவாக சூரிய கிரகணம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது.

ஒரு வருடத்தில் இரண்டு முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் பகுதியாக அல்லது மொத்தமாக பூமியில் இருந்து பார்க்கப்படுகின்றன.

இதற்கிடையில், முழு சூரிய கிரகணம் பூமியில் எங்காவது இருந்து ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும்.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நிகழும் மிகவும் அரிதான நிகழ்வாகும்.

இறுதியாக 1979 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணத்தின் பாதை கனடாவைக் கடந்தது.

இம்முறை சூரிய கிரகணம் எந்த நேரத்தில் நிகழும்?

திங்கட்கிழமை சூரிய கிரகணத்தின் முழுப் பாதை Ontario, Quebec, New Brunswick, Prince Edward Island, Nova Scotia, Newfoundland and Labrador வழியாகச் செல்லும்.

மொத்தப் பாதைக்கு வெளியே உள்ள நகரங்கள் பகுதி சூரிய கிரகணத்தைக் காணும்.

இம்முறை உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, சூரிய கிரகணம் மதியம் அல்லது மாலையில் நிகழும்.

கனடாவில், முழு சூரிய கிரகணத்தின் ஆரம்ப நேரம் (கிழக்கு நேரப்படி – ET) மாலை 3:12 மணி.

இதன் முழுமையின் பாதை மாலை 4:16 மணிக்கு முடிவடைகிறது.

மதியம் 1:40 மணி முதல் பகுதி கிரகணம் மாலை 5:18 மணி வரை தெரியும்.

Related posts

ஸ்ரீலங்காவில் இன்னும் அமைதி இல்லை!

thesiyam

கனடிய தமிழர் பேரவை – CTC – நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan

கனேடிய முதற்குடிகள் மீதான இனப் படுகொலையும்,பண்பாட்டு படுகொலையும்!

Gaya Raja

Leave a Comment