கனடாவுக்கு வரும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார்.
தற்காலிக குடியேற்றவாசிகளின் நிலைமையை “கட்டுப்பாட்டுக்குள்” கொண்டு வர வேண்டும் என பிரதமர் கூறினார்.
கனடாவில் உள்வாங்க முடிந்ததை விட அதிக எண்ணிக்கையில் தற்காலிக குடியேற்றவாசிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
2017 இல், கனடாவின் மக்கள் தொகையில் இரண்டு சதவீதமாக இருந்த தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை இப்போது 7.5 சதவீதமாக உள்ளது என Justin Trudeau சுட்டிக் காட்டினார்.